Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் பிரபல கிரிக்கெட் வீரர்

Advertiesment
tamim iqbal
, வெள்ளி, 7 ஜூலை 2023 (20:24 IST)
வங்கதேச கிரிக்கெட் அணியின்  வீரர் தமிம் இக்பால் தன் ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் அதை திரும்ப பெற்றுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் தமிம் இக்பால். இடது கை தொடக்க பேட்ஸ்மேனான இவர் தன் 34 வயதில்  நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
.
இந்த  நிலையில், வங்கதேச அணியின் ஒருநாள் வடிவிலான அணிக்கு இவர் கேப்டனாக இருந்த நிலையில், இவர் ஓய்வு முடிவை அறிவித்தது கிரிக்கெட் போர்டுக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேஜ் ஹசீனாவை தமிம் இக்பால் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பின்னர், இக்பால் தன் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளானர். இவர் ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் 42 வது பிறந்தநாள்... பிரமாண்ட கட்- அவுட் வைத்த ரசிகர்கள்..வைரல் புகைப்படம்