Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல வீரர்!

Advertiesment
aaron pinch
, செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:43 IST)
ஆஸ்திரேலியா டி-20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி முன்னணி அணியாக உள்ளது.

தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியலில்  முதலிடத்தில் உள்ள  ஆஸ்திரேலியா அணியின் டி-20 அணியின் கேப்டனும், அதிரடி பேட்ஸ் மேனுமான ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதாகும் ஆரோன் பின்ச், இதுவரை 254 சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் விளையாடியுள்ளார்.

அதில், 146 ஒரு நாள் போட்டிகளிலும், 103 டி-20 போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

மேலும், ஆஸ்திரெலிய டி-20 அணிக்கு 76 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த ஆரோன் பின்ச்,5 டெஸ்ட் போட்டிகளில் 278 ரன் களும்ன், 146 ஒரு நாள் போட்டிகளில் 5406 ரன் களும், 103 டி-20 போட்டிகளில் விளையாடி3120 ரன் களும் அடித்துள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை: 2022 விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேர்