Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (11:46 IST)
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற  11–ந் தேதி முதல் ஆகஸ்டு 12–ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி  டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி  விசுவநாதன் ஆகியோர் நேற்று நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில், வருகிற 11-ந்தேதி தொடங்கும் 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32  ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்  சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 
 
நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது. நெல்லையில் 11-ந் தேதி  நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. 
 
டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை  பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments