Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பானை புரட்டிப் போட்ட மழை - பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஜப்பானை புரட்டிப் போட்ட மழை - பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
, திங்கள், 9 ஜூலை 2018 (11:33 IST)
ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 100 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 
ஜப்பானின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பலர் வீடுகளை இழந்தும் உடமைகள், கார்கள் அனைத்தும் இழந்து பரிதவிக்கின்றனர். பலர் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போகியுள்ளனர். இதுவரை 87 பேர் இந்த துயர சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில் இன்று ஜப்பான் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: பரபரப்பு தகவல்