Publish Date: Wed, 10 Nov 2021 (23:58 IST)
Updated Date: Thu, 11 Nov 2021 (00:01 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.
இதில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.