இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடிய நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக அபாரமாக விளையாடி 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார் என்பதும் கேஎல் ராகுல் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில், கேமரன் கிரீன்61 ரன்களும், மேத்யூ 45 ரன்களும், ஸ்டீவ் 35 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்,
ஆஸ்திரேலியா அணி 4 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில், படேல் 3 விக்கெட்டுகளும், யாதவ் 2 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.