Publish Date: Mon, 21 Nov 2022 (16:04 IST)
Updated Date: Mon, 21 Nov 2022 (16:16 IST)
கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது டி 20 போட்டிகளில் அவரின் இரண்டாவது சதமாகும். இதன் மூலம் நேற்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பேசிய அவர் “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரைவில் அந்த கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.