Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தான் முன்னிலை: அமெரிக்கா அறிவிப்பு

Advertiesment
america
, திங்கள், 21 நவம்பர் 2022 (11:51 IST)
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தான் முன்னிலை என அமெரிக்க பாதுகாப்பு துறை ஆலோசகர் ஜான் ஃபைனர் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நட்பு அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் அமெரிக்க இந்திய வர்த்தகம் அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், ‘உலகளாவிய ஒத்துழைப்பு நட்பு நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்க நட்புறவு முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார் 
 
இந்தியா தலைமை ஜி 20 கூட்டமைப்பின் மாநாடு போன்ற நிகழ்வுகள் அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி மற்றும் ஜோ பைடன் இடையிலான நட்பு மேலும் வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 
 
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நட்பு மேலும் வளர்ந்தால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பலன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: 2025 பிப்ரவரியில் பதவியேற்பு!