Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்றாலும் நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன்… சூர்யகுமார் கருத்து!

Webdunia
வியாழன், 4 மே 2023 (08:24 IST)
நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பஞ்சாப்பில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் மிக அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 215 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18.5 ஓவர்களில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் இசான் கிசான் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக ஆடிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய சூர்யகுமார் “வெற்றி பெற்றாலும், நான் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். கடந்த போட்டியிலும் நான் இதே தவறை செய்தேன். நான் இந்த போட்டியில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நல்ல டச்-ல் இருந்த இஷான் கிஷானுக்கு உதவியாக இருந்தேன். நான் பெரிய ஹிட்டர் இல்லை.  ஆட்கள் இல்லாத இடங்களிலும் டைமிங்கிலும் ரன்களைக் குவிப்பவன்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

அடுத்த கட்டுரையில்
Show comments