Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா டக்-அவுட் ஆன போதிலும் வெற்றி பெற்ற மும்பை.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (07:48 IST)
நேற்றைய போட்டியில் மும்பை அணி 215 என்ற இமாலய இலக்கை விரட்டிய நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆனார். ஆனால் மும்பை அணி மிக அபாரமாக விளையாடி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் மிக அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 215 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால் அதே நேரத்தில் மும்பை அணியின் இசான் கிசான் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார் என்பதும் கடைசி நேரத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 18.5 ஓவர்களில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தற்போது 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments