Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லில் இருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்! – மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (08:45 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி இவ்வாறு தோல்வி அடைந்திருப்பது மும்பை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

மோசமாக விளையாடி வரும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் உள்ளிட்ட சிலரே சிறப்பாக விளையாடி ஓரளவு அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி குஜராத் அணியுடன் நடந்த போட்டியில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்  காயமடைந்தார்.

இதனால் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை அணியின் வெற்றி மேலும் பாதிக்கப்படும் என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு.. ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சிக்ஸர் மழை..!

பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments