30 வயதுக்கு மேல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி 20 போட்டிகளில் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணிக்குக் கேப்டனாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார் சூர்யகுமார். அவர் தலைமையில் இந்திய டி 20 அணி மிகச்சிறப்பாக ஆடி வருகிறது.
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி தொடரை வென்றது. அடுத்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பை மற்றும் 2028 ஆம் அண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும்தான் தற்போது தன்னுடையக் கவனம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் தன்னை இந்தியாவின் மிகச்சிறந்த டி 20 பேட்ஸ்மேன் எனக் கூறியுள்ளார். மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்ய சொன்னபோது அவர் “டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின்தான். அதே போல ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்தவர்கள். டி 20 போட்டிகளில் என்றால் நான் என்னைதான் தேர்வு செய்வேன்” எனக் கூறியுள்ளார்.