அய்யோ நான் ரோஹித் ஷர்மா போல ஆகிட்டேனே?. வீரரின் பெயரை மறந்து கலகலப்பூட்டிய சூர்யகுமார்!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (13:54 IST)
இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடிய ஓமன் அணி 4 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் மட்டுமே சேர்த்து தோற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தின் போது இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும் போது செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாச் போட்டுவிட்டு அணியினரின் பெயர்களை சொல்லும் போது ஒரு வீரரின் பெயரை மறந்துவிட்டு “அய்யோ நான் ரோஹித் ஷர்மா போல மறந்துவிட்டேன்” என சிரித்தார். ரோஹித் ஷர்மா பல நேரங்களில் இதுபோல வீரர்களின் பெயரை மறந்துவிட்டு சமாளிப்பார். அதுபோல இப்போது சூர்யகுமாரும் பெயரை மறந்தது ரசிகர்கள் மத்தியில் கேலிகளை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments