Publish Date: Fri, 21 Jun 2024 (16:47 IST)
Updated Date: Fri, 21 Jun 2024 (16:54 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் சூப்பர் 8 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது டி 20 போட்டிகளில் அவர் பெறும் 15 ஆவது ஆட்டநாயகன் விருதாகும். இந்திய அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் என்ற பெருமையை கோலியோடு சேர்ந்து இப்போது சமன் செய்துள்ளார் சூர்யகுமார். கோலி 113 போட்டிகளில் பெற்றதை சூர்யகுமார் 60 போட்டிகளிலேயே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.