Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனைப் போல துள்ளிக்குதித்து இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிய சுனில் கவாஸ்கர்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (07:31 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நேற்று இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் நேற்றைய போட்டி இருக்கையின் நுனிக்கே ரசிகர்களைக் கொண்டுவந்துவிட்டது.
ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலியும் ஹர்திக் பாண்ட்யாவும் நிலைத்து நின்று விளையாடி மீட்டனர். அதிலும் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை இந்திய அணியின் வசமாக்கினார்.

அப்போதும் இறுதி ஓவரின் இறுதி பந்து வரை போட்டியில் திக் திக் என்றே சென்றது. இதையடுத்து இறுதிப் பந்தில் அஸ்வின் வெற்றி ரன்னைக் குவித்த போது பார்வையாளர்கள் மத்தியில் நின்ற இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் சிறு குழந்தை போல துள்ளி குதித்து வெற்றிக் களிப்பை கொண்டாடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments