Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

33 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!

pak vs ind
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:19 IST)
33 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் 160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மசூத் மற்றும் அகமது ஆகிய இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினார்
 
இதனை அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது
 
தற்போது விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டியிருப்பதால் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணியைக் காப்பாற்றிய இரண்டு வீரர்கள்… இறுதியில் கோட்டை விட்ட இந்தியா!