Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கிங் கோலி ஈஸ் பேக்'' பிரபல கிரிக்கெட் வீரர் டுவீட்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (19:51 IST)
இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக கோலி  இஉள்ளிட்ட வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது  இதனை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் நோ பால் மற்றும் வைடுகுள் போட்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொதப்பியதால் இந்திய அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்திய அணி சார்பில், கோலி 82 ரன் களும், பாண்டியா 40 ரன் களும்,ம் சூர்யகுமார் யாதவ் 15 ரன் க்ளும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இப்போட்டியில் விராட் கோலி 53 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்து அணியின் வெறறிக்கு உதவினார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளதாகப் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன் டுவிட்டர் பக்கத்தில், ''கிங் கோலி ஈஸ் பேக் ''என்று டுவீட் பதிவிட்டுள்ளார். ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் யூனியர் என்.டி.,ஆர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், இந்திய அணி வீரர்களுக்குப் பாராடுகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

கே.எல்.ராகுல் சதத்தை அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் அடித்த அரைசதங்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் இந்தியா ஸ்கோர்..!

கே.எல்.ராகுல் அபார சதம்.. மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

“நீ 15 முறை டக் அவுட் ஆனாலும் வாய்ப்புத் தருவேன்..” கேப்டன் குறித்து அபிஷேக் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments