ஸ்மித் சதத்தால் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
, வியாழன், 16 மார்ச் 2017 (16:58 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போடியில் ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.
புனேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் கேப்டன் ஸ்மித் தொடர்ந்து ரன்கள் குவித்து வந்தார். க்ளன் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் ஸ்மித் 117 ரன்களுடன் களத்தில் உள்ளார். க்ளன் மேக்ஸ்வெல் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். மேலும், இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்த கட்டுரையில்