Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

Prasanth Karthick
ஞாயிறு, 30 மார்ச் 2025 (16:05 IST)

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் புகுந்த சன்ரைசர்ஸ் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

 

ஐபிஎல் போட்டிகளில் இன்று மதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி வழக்கம்போல பேட்டிங்கை கையில் எடுத்தது. சரமாரியாக ரன்களை அடித்து குவித்துவிட்டு சேஸிங்கில் கட்டுப்படுத்தும் கடப்பாறை பேட்டிங் உத்தியை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

 

ஆனால் டெல்லி அணியின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸின் கடப்பாரை லைன் அப் ஆட்டம் கண்டு வருகிறது. அபிஷேக் சர்மாவை முதல் ஓவரிலேயே ரன் அவுட் செய்தார் விப்ராஜ் நிகம். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேல் இரண்டே ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதிரடியாக விளையாட வந்த நிதிஷ் குமார் ரெட்டி, அதே ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். தொடர்ந்து 4 வது ஓவரில் அதே மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ட்ராவிஸ் ஹெட்டும் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இப்போது அணி க்ளாசனின் ஆட்டத்தை நம்பி உள்ளது.

 

பவர் ப்ளே முடிவதற்குள் சன்ரைசர்ஸின் 4 விக்கெட்டுகளையும் ட்ராவிஸ் ஹெட் பிடுங்கி வீசியது சன்ரைசர்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கை ஓங்கத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments