இலங்கை அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் தொடரை வென்றுள்ளது இலங்கை அணி.
இலங்கை அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று காலேயில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 492 ரன்கள் எடுத்தது. பின்னட் ஆடிய இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 11 ஓவர்களளில் 3 விக்கெட் இழப்பிற்கு 704 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதில், மதுஷ்கா, குசால் ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2 வது இன்னிஸ்ங்கில் விளையாடியது. ஆனால், 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது.
இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்து பால் ஸ்டிர்லிங் 1 ரன், லோர்கடன் டக்கர் 13 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். எனவே 77.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு அயர்லாந்து ஆட்டமிழந்தது.
இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டும், பெர்ன்னாண்டோ 3 விக்கெட்டும் கைப்பற்றினர். எனவே இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.