Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடியும் தண்டனைக் காலம் – ரீஎண்ட்ரி கொடுக்கும் ஸ்ரீசாந்த்!

Advertiesment
முடியும் தண்டனைக் காலம் – ரீஎண்ட்ரி கொடுக்கும் ஸ்ரீசாந்த்!
, வெள்ளி, 19 ஜூன் 2020 (08:20 IST)
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் செப்டம்பர் மாதத்தோடு முடிவுக்கு வரும் நிலையில் அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.

அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2011 உலகக்கோப்பையில் சூதாட்டம் நடந்தது – இலங்கை அமைச்சர் பேச்சால் சர்ச்சை!