Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்கொலை செய்துகொண்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை! மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி!

Advertiesment
தற்கொலை செய்துகொண்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை! மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி!
, வியாழன், 18 ஜூன் 2020 (08:20 IST)
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் கிரிக்கெட் வீராங்கனை தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் தாய்நானி கிராமத்தைச் சேர்ந்தவர் அயந்தி ரியங். 16 வயதான இவர் பழங்குடி இனைத்தைச் சேர்ந்த இவர் வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர். இவர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் திறமையும் கொண்டவர். திரிபுராவின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த செய்தியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அணியினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஊரடங்கால் பயிற்சிகள் எதுவும் நடக்காததாலு, கிரிக்கெட் சங்கம் நடத்திய ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாததும் அவருக்கு மன அழுத்தத்தை தந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட பதற்றம் குறைவதற்குள் இந்தியா மற்றுமொரு திறமையாளரை இழந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றில் மிதக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ