Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது போட்டி: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Advertiesment
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது போட்டி: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
, புதன், 18 செப்டம்பர் 2019 (13:26 IST)
இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்கா மோதும் இரண்டாவது டி20 சுற்று ஆட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியினர் 3 சுற்று கொண்ட டி 20 ஆட்டத்தில் இநிதிய அணியுடன் விளையாடி வருகின்றன. முதல் நாள் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. அப்போது பெய்த கனமழையால் டாஸ் போடாமலே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டமே ரத்தாகிவிட்டதால் மீதம் இருக்கும் இரண்டு சுற்றுகளில் தொடர் வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்தியாவால் வெற்றிபெற முடியும். ஆளுக்கொரு ஆட்டம் வெற்றிபெற்றால் மேட்ச் ட்ராவில் முடிந்துவிட கூடிய சாத்தியம் இருப்பதால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு இப்போதே இந்திய அணி தயாராகி வருகிறது. அதனால் வீரர்களை உலக கோப்பையை கணக்கில் வைத்தே தேர்ந்தெடுத்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த முறை இந்திய அணியில் நிறைய ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மிடில் ஆர்டரில் களம் இறங்கியுள்ள மனிஷ் பாண்டே மற்றும் ஷ்ரெயாஸ் ஐயர் இதுவரையிலான போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ எனக்கு பியர்கள் வாங்கித் தரவேண்டும் – ஜாக் லீச்சிடம் நாதன் லயன் நகைச்சுவை !