ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.
 
									
										
			        							
								
																	67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில்,  அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தற்போது வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	ஆஸி அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும், போலண்ட் மற்றும் க்ரீன் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.