Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெற்றி பெற முடியாது… சவுரவ் கங்குலி கருத்து!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:32 IST)
இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐசிசி தொடரில் இந்திய அணி சொதப்புவது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி “ஐசிசி தொடரில் எல்லா நாட்களும் நம்மால் வெல்ல முடியாது. நம்முடைய அணி குறைந்த பட்சம் பைனல் வரை செல்வது குறித்து நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியும்.

உலகக்கோப்பை வெற்றி என்பது அந்த நாளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது. பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நாக் அவுட் போட்டிகளை எப்படி வெல்வது என்பது தெரியும். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments