Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரக்ஞானந்தா: 'சதுரங்க ராஜா' பட்டத்தை நெருங்கும் 'தமிழ்நாட்டு பையன்'

Advertiesment
Rameshbabu Praggnanandhaa
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (20:09 IST)
அதில் உங்களுக்குப் பிடித்த செஸ் வீரர் யார் என்று பார்வையாளர்களிடம் தொகுப்பாளர் கேட்கும்போது, பெரும்பாலானவர்கள் மேக்னஸ் கார்ல்சன் என்றே கூறினார்கள். சிலர் வேறு சிலரின் பெயர்களைக் கூறினார்கள். ஒருவர் கூட பிரக்ஞானந்தாவின் பெயரைக் கூறவில்லை.
 
அப்படியொரு எதிர்பார்க்கப்படாத இடத்தில் இருந்து சதுரங்கத்தின் ராஜாவாக முடிசூடுவதற்கான இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் அவர்.
 
அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார். பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதினார்.
 
அரையிறுதிப் போட்டியில் வென்ற பிறகு பேசிய பிரக்ஞானந்தா, "மேக்னஸ் கார்ல்சனுடன் ஆடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்று கூறினார்.
 
அஜர்பைஜானில் நடைபெறும் உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தாவுக்கும் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடினார்.
 
இன்று முதல் நாள் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இந்நிலையில், இருவருக்கும் இடையிலான இன்றைய போட்டி டிராவில் முடிந்தது.
 
முதல் சுற்று 35 காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. நாளை கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார்.
 
பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.
 
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
 
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் ரேபிட் முறையில் இன்று நடைபெற்றது. ரேபிட் செஸ் போட்டியில் வல்லவரான பிரக்ஞானந்தாவுக்கு இது சாதகமாக அமைந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
 
ராமன் ராகவ்: 40 கொலை செய்த இவர் சரணடைந்தும் கோட்டை விட்ட போலீசார் பட்ட பாடு தெரியுமா?
 
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபா சோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
 
விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
 
இறுதி போட்டியில் பிடே உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்திற்காக முதல் நிலை வீரரான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடுவார்.
 
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் உள்பட கார்ல்சனை 3 முறை பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார். குறிப்பாக, ரேபிட் செஸ் போட்டியில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால், பிடே உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா வெல்வாரா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 
நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.
 
பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான். இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.
 
பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.
 
அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.
 
திறமை மற்றும் தன்னம்பிக்கை, இவை இரண்டும் பிரக்ஞானந்தாவிடம் காணலாம். தூரத்தில் இருந்து பார்த்தால், அவரது கண்ணோட்டம் ஒரு சாம்பியனாகத் தெரியவில்லை, வெறுமனே எண்ணெய்யில் அழகுபடுத்தப்பட்ட முடி போல அவர் ஜொலிக்கிறார். ஆனால், நிஜத்தில் எளிமையாகவும் இயல்பான மாநிறத்துடன் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். செஸ் உலகின் மிகப்பெரிய நாயகனாக இப்போது இவர் மீதான பார்வை விரிந்திருக்கிறது.
 
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செஸ் உலகம் பிரக்ஞானந்தா பற்றி அறியத் தொடங்கியபோது, அவர் 12 வயது மற்றும் 10 மாதங்களை அடைந்திருந்தார். அதற்கு முன்பு எந்த இந்தியனும் செய்ய வெளிப்படுத்தாத ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.
 
பிரக்ஞானந்தாவுக்கும் அவரது அக்காவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் நான்கு வருடங்கள். ஆனாலும் அந்த வேறுபாடுகளைக் கடந்து சதுரங்கத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் சகோதரனுக்கு கற்றுக் கொடுத்தார் அவரது சகோதரி. விரைவில் ஒரே வீட்டிலேயே இருவரும் பரஸ்பர போட்டி விளையாட்டுகளை ஆடத் தொடங்கினர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியேயேயும் திறமைகளை வெளிப்படுத்தினர். அதன் விளைவாக வீட்டில் வெற்றிக் கோப்பைகள் குவிந்தன.
 
பிரக்ஞானந்தா முதலில் 2013இல் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினார், பின்னர் இரண்டு ஆண்டுகளில் 15 வயதுக்குட்பட்டோருக்கான உலக பட்டத்தை வென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம். சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆவது எவ்வளவு சவாலானது என்பதை நீங்களே அளவிடலாம். அது ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்கு நிகரானதாக சக வீரர்கள் ஒப்பிடுகிறார்கள்.
 
இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
 
பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனதும், சூசன் நைனன் பிரபல விளையாட்டு இணையதளமான ஈஎஸ்பிஎன்-இல் "ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு பையன்" என்று ஒரு கட்டுரை எழுதினார்.
 
இந்த வீரரின் பெயரில் தாங்கியுள்ள எழுத்துப்பிழை, செஸ் உலகமே கலங்கி நிற்கும் வகையில் உள்ளது என்று அந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிப்படையாக, ஒரு பெயர் அழைக்கப்படுவதை வருணித்த ஆசிரியரின் குறிப்பு, அதிர்ச்சியூட்டும் தரத்தை நோக்கியதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கின்னஸ் சாதனை படைத்த பூனை...