Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

vinoth
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (14:25 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான டி 20 போன்ற விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் உயிரைக் கொடுத்து பந்துவீசிய சிராஜ் 9 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து வீரர்களே பாராட்டு வார்த்தைகளால் மகுடம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஐந்தாம் நாள் தான் சிறப்பாக செயல்பட்டது குறித்து சிராஜ் பேசியுள்ளார்.

அதில் “வழக்கமாக நான் 8 மணிக்குதான் எழுந்திருப்பேன். ஆனால் நேற்று ஆறு மணிக்கே எழுந்தேன். ’இன்று உன்னால் சாதிக்க முடியும்’ என்று நம்பிக்கையாக இருந்தது. உடனே கூகுளுக்கு சென்று  ரொனால்டோவின் believe வால் பேப்பரை டவுன்லோட் செய்து அதை மொபைலில் முகப்புப் படமாக வைத்தேன்.  நம்பிக்கை மிகவும் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments