இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதையடுத்து ஆடிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி ஆட்டமுடிவில் 4 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸின் போது கிறிஸ் வோக்ஸ் வீசிய இடுப்புக்கு மேல் உயரமான பந்தை தடுத்து ஆடினார் ஜெய்ஸ்வால். அப்போது அவரின் பேட்டின் ஹேண்டில் உடைந்து பேட்டில் இருந்து வெளியேறியது. இதையடுத்து அவர் வேறு பேட்டை மாற்றி இன்னிங்ஸை தொடர்ந்தார்.