ஆஸ்திரேலிய அரசு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசாவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் சென்று இருந்தார். அவர் தடுப்பு ஊசி செலுத்தவில்லை என்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய அரசு அவருடைய விசாவை ரத்து செய்தது
இதனையடுத்து ஜோகோவிச் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு விசா அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து ஆஸ்திரேலிய அரசு மேல் முறையீடு செய்த நிலையில் தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் விசாவை ரத்து செய்தது சரியே என்றும் உத்தரவிட்டது
இதனையடுத்து இன்று காலை அவர் ஆஸ்திரேலிய இருந்து துபாய் சென்று அங்கிருந்து தனது சொந்த நாடான செர்பியா சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.