துரத்தும் காயம்… ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் அனுமதி…!

vinoth
சனி, 25 அக்டோபர் 2025 (18:03 IST)
சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 236 ரன்கள் சேர்த்தது.

237 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் மூத்த வீரர்களான, ரோஹித் சர்மா (121 ரன்கள்) சதம் அடித்தார், விராட் கோலி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த போட்டியை எளிதாக வென்றது.

இந்த போட்டியில் ஃபீல்ட் செய்த போது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா அபார சதம்.. விராத் கோஹ்லி மகத்தான சாதனை.. இந்தியா வெற்றி..!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் சீண்டல்: இந்தூரில் ஒருவர் கைது

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கு.. ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா..!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்த இந்திய பவுலர்கள்.. 6 பவுலர்களுக்கும் கிடைத்த விக்கெட்டுக்கள்..!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தானின் பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments