இன்று நடக்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண கிரிக்கெட் உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்தியா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றுள்ளது.
ஓப்பீட்டளவில் பாகிஸ்தான், இந்தியாவை விட வலிமை குறைவான அணியாகவே உள்ளது. அதனால் இந்தியாவிற்கே இன்று வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் போட்டி பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆகிப் ஜாவித் “இன்று இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.