இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்று பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.
கேப்டன் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் அவுட் ஆக அதனை அடுத்து சுப்மன் கில் இரண்டு ரன்களில் அவுட்டானார். இதனை அடுத்து ஜெயஸ்வால் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட் ஆகினர். நிதானமாக விளையாடிய கோலி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இந்த போட்டியில் பின் வரிசையில் இறங்கிய ஷர்துல் தாக்கூர் நிலைத்து நின்று 24 ரன்கள் சேர்த்தார். அவர் 44 ஆவது ஓவரில் பேட்டிங் செய்யும் போது கோயிட்சி வீசிய பவுன்சர் அவர் தலையில் தாக்கியது. உடனடியாக மருத்துவர்கள் வந்து அவரை சோதனை செய்தனர். அப்போது ஹெல்மெட்டை தாண்டியும் அவரை தாக்கிய பந்தால் நெற்றியில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் பேட் செய்தார்.