Publish Date: Wed, 22 Mar 2023 (09:16 IST)
Updated Date: Wed, 22 Mar 2023 (09:32 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய முக்கியக்காரணியாக இருந்து 186 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் கோலி. இந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் கோலி.
இதுவரை 75 சதங்களை அடித்துள்ள கோலி, சச்சினின் சாதனையான 100 சதங்களை விரைவில் அடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் “100 சர்வதேச சதங்கள் அடிக்கும் வாய்ப்பு கோலிக்கு பிரகாசமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.