Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியிடம் இதை சொல்ல விரும்புகிறேன்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி ஆசை!

Advertiesment
மோடியிடம் இதை சொல்ல விரும்புகிறேன்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி ஆசை!
, புதன், 22 மார்ச் 2023 (08:52 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசியல் காரணங்களால் இரு நாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் இந்த அணிகள் மோதும் ஐசிசி போட்டிகளை ஒரு வெறியோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் இருநாட்டு தொடர் நடக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷாகித் அப்ரிடி இப்போது இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதில் “தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும், ஏனெனில் இதுவே தீர்வு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், இரு அணிகளுக்கு இடையே போட்டித் தொடரை ஏற்பாடு செய்யவும் திரு மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன் இந்தியா இங்கு வந்திருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்கும். சிறந்த கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தானுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது சண்டை காலம் அல்ல"  எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது, ​​​​மக்கள் எங்களுக்கு நிறைய அன்பைக் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. 2005 தொடரை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், அது பிரமாண்டமாக இருந்தது. ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் ஷாப்பிங் செய்வார்கள். அவர்களிடமிருந்து யாரும் பணம் வாங்குவதில்லை. இதுவே இரு நாட்டுக்கும் அழகு” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி சொன்னதால்தான் நான் அதை செய்தேன்… சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!