இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது மனைவியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டார் அவரது மனைவி ஹாசின். இதையடுத்து புகழ் வெளிச்சத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் ’ஷமிக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பலப் பெண்களோடு தொடர்புகள் இருப்பதாகவும், அந்தப் பெண்களின் மூலம் பல சர்வதேசப் போட்டிகளில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.’
இந்த புகார்களால் இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஷமியை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது. மேலும் அவரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அவரை விசாரித்தது. விசாரணையின் முடிவில் அவரின் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்தது. தற்போது அவர் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
ஷமி, ஹாசின் தமபதியினருக்கு இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து தற்போது முகமது ஷமி தனது ஹாசின் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும் அதனால் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.