Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கோலி மீண்டெழுவது அவரின் கையில்தான் உள்ளது…” பாக் முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:44 IST)
கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறி இருக்கும் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோஹ்லி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அவரை அணியில் இருந்து நீக்கவேண்டுமென கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கோலி குறித்து பாகிஸ்தான் ’பூம் பூம்’ ஷாகீத் அப்ரிடி தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் அப்ரிடி “கோலி மீண்டெழுவது அவர் கையில்தான் உள்ளது. கடினமான சூழ்நிலைகள்தான் நல்ல வீரரை கண்டுபிடிக்க வழிவகுக்கும்.” எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கோலியின் பார்ம் குறித்து பேசுவதுதான் கிரிக்கெட் உலகின் வாடிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments