Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்ரிடி இல்லாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியா இருக்கும்! – வாக்கர் யூனிஸ் கருத்து!

Shahin Afridi
, ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:11 IST)
நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27ம் தேதி அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 6 நாட்டு அணிகள் மோதும் இந்த தொடரில் லீக் ஆட்டங்களில் 28ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயமடைந்த அப்ரிடி 5 வாரங்கள் ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டி20 உலகக்கோப்பை பொட்டியில் இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அப்ரிடி. இந்த ஆசிய உலக்கோப்பையில் அவர் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், அப்ரிடி இல்லாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி அளிக்கும். ஆனால் ஆசிய கோப்பையில் அப்ரிடி விளையாட முடியாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்பாவேக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!