Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கான்… ரசிகர்கள் அதிர்ச்சி!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கான்… ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth

, வியாழன், 23 மே 2024 (07:12 IST)
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில்  நேற்று முன்தினம் மோதின.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியைக் காணவந்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வீரர்களை உற்சாகப்படுத்தினார். அணி வெற்றி பெற்றதும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது ஷாருக் கான் ரசிகர்கள் மத்தியில் அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த கப் நம்தே… ஆர் சி பியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்!