Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் விக்கெட் எடுக்காததற்கு இதுதான் காரணம்… விமர்சனம் செய்த சேவாக்!

Advertiesment
ஐபிஎல் 2024

vinoth

, செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (07:08 IST)
இந்திய அணியின் மூத்த பவுலரான அஸ்வின் தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதே போல ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் அஸ்வினுக்கு இந்த சீசன் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. சீசனில் 8 போட்டிகள் விளையாடியுள்ள அவர் இரண்டே இரண்டு விக்கெட்கள் மட்டும் வீழ்த்தியுள்ளார்.  அவர் 200 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவரின் மோசமான ஐபிஎல் சீசனாக இந்த சீசன் அமைந்துள்ளது.

இதுபற்றி இந்திய அணியின் மூத்த வீரரான சேவாக் விமர்சனம் செய்துள்ளார். அதில் “அஸ்வின் விக்கெட்களை எடுக்கவேண்டும் என பந்துவீசுவதில்லை. மாறாக குறைவான ரன்களைக் கொடுக்கவேண்டும் என்றே அவர் பந்துவீசுகிறார். ஆஃப் ஸ்பின் பந்துவீசினால் பவுண்டரி அடிப்பார்கள் என கேரம் பால்களை வீசுகிறார். ஆனால் நான் ஒரு பயிற்சியாளராக ஆலோசகராகவோ இருந்தால் அவரை விக்கெட்கள் எடுக்கும் பந்துகளைதான் வீச சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிசமமாக நிற்கும் இரு அணிகள்.. 2வது இடத்திற்கு போட்டி! அதிசயம் நிகழ்த்தப்போவது யார்? – இன்று KKR vs DC மோதல்!