Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறை சுட்டிக்காடிய கவாஸ்கர்… மன்னிப்புக் கேட்ட சர்பராஸ் கான்!

Webdunia
புதன், 13 மார்ச் 2024 (11:14 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது சர்பராஸ் கான் அவசரப்பட்டு ஒரு தவறான பந்தை அடிக்கப் போய் தன் விக்கெட்டை இழந்தார்.  அவரின் இந்த தவறை அப்போதே சுட்டிக் காட்டினார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர். அவருக்கு டான் பிராட் மேன் தன்னிடம் கூறிய அட்வைஸ் ஒன்றையும் கூறியிருந்தார்.

அவரது அறிவுரையில் “சர்பராஸ் கான் அவுட்டான பந்து ஷாட் பிட்ச்சாக வந்தது. அதையடித்து அவுட் ஆனார். தேனீர் இடைவேளை முடிந்த முதல் பந்தில் அந்த ஷாட் தேவையில்லாதது. அவருக்கு நான் பிராட்மேன் எனக்கு சொன்ன அறிவுரை ஒன்றை சொல்வேன். நாம் எத்தனை ரன்கள் அடித்திருந்தாலும் எதிர்கொள்ளும் பந்தை நாம் ஜீரோவில் இருப்பதாக நினைத்தே எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதே போல சர்பராஸ் கானும் அவசரப்படாமல் ஆடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

கவாஸ்கர் சுட்டிக்காட்டிய இந்த தவறை ஏற்றுக்கொண்ட சர்பராஸ் கான் தற்போது அதற்காக கவாஸ்கரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். கவாஸ்கரின் நண்பர் பாட்யாவை சந்தித்த போது “நான் கவாஸ்கரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக சொல்லிவிடுங்கள். நான் இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்றும் சொல்லிவிடுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments