Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி பற்றி அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

vinoth
புதன், 13 மார்ச் 2024 (10:51 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப் பட்டு வந்தது.

இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த என் சி ஏ அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

இதையடுத்து தற்போது பிசிசிஐ ரிஷப் பண்ட் 100 சதவீத உடல் தகுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படும் உசேன் போல்ட். உலக சாதனை படைத்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

ஆசியக் கோப்பை: மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போட்டி… தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. விறுவிறுப்பான கட்டத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா? இன்று இறுதிப்போட்டி..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments