”இப்படித்தான் ரன் அவுட் பண்ணுவாங்களா??”.. சிரிப்பை ஏற்படுத்திய இலங்கை பந்துவீச்சாளர்..வைரல் வீடியோ

Arun Prasath
வியாழன், 31 அக்டோபர் 2019 (09:56 IST)
ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சாளர் ஒரு கையில் பந்தை வைத்து கொண்டு மறுகையால் ஸ்டெம்ப்பை தூக்கி ரன் அவுட் செய்ய முயன்ற சம்பவம் அனைவராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கிடையே டி20 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதல் ஆட்டத்தில் இறங்கி 19 ஓவர்களில் 117 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 13 ஓவர்களிலேயே 118 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனிடேயே இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் சண்டகன், 13 ஆவது ஓவரை வீசினார். அப்போது அவரது இரண்டாவது  பந்தை எதிர்கொண்ட வார்னர், அந்த பந்தை நேர் திசையில் அடித்தார். அவர் அடித்த பந்து பவுலரின் கையில் சிக்காமல் நேராக மறுமுனையில் உள்ள ஸ்டெம்பினை அடித்தது.

அப்போது மறுமுனையிலிருந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்மித், எல்லை கோட்டிற்கு வெளியே வந்துவிட்டார். அவர் திரும்புவதற்குள் அவரை ரன் அவுட செய்ய வேண்டும் என்று நினைத்து சண்டகன் பந்தை கையில் எடுத்தார். ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பந்தை ஸ்டெம்ப்பை நோக்கி வீசாமல், மற்றொரு கையினால் ஸ்டெம்ப்பை பிடுங்கினார். அதற்குள் ஸ்மித் எல்லை கோட்டிற்குள் வந்துவிட்டார்.

இந்த சம்பவம் இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், இது பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments