Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டி முடிந்ததும் விராட் கோலியை சமாதானம் செய்த சனத் ஜெயசூரியா!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (15:56 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 240 என்ற மிக எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ரோஹித் ஷர்மா அமைத்துக் கொடுத்தும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே சேர்த்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது விராட் கோலி பேட் செய்த போது அவருக்கு LBW முறையில் அவுட் கேட்கப்பட்டது. நடுவர் அவுட் கொடுக்க கோலி DRS அப்பீல் செய்தார். அப்போது பந்து பேட்டில் பந்து சென்றது தெரியவந்தது. அதனால் நடுவரின் முடிவு பின்வாங்கப்பட்டது.

ஆனால் நடுவரின் இந்த முடிவை ஏற்காத இலங்கை வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இலங்கைக் கேப்டன் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். பயிற்சியாளர் ஜெயசூர்யாவும் ரிசர்வ் நடுவரிடம் விவாதம் செய்தார். இது பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோலியிடம் கைகுலுக்கிய ஜெயசூர்யா, அந்த சம்பவம் குறித்து விளக்கி சமாதானமாகப் பேசினார். அதை ஏற்ற கோலி சிரித்து அவரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments