Publish Date: Mon, 20 Jun 2022 (10:24 IST)
Updated Date: Mon, 20 Jun 2022 (10:26 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படம் டாப்ஸி நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடிய நிலையில் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.. பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவரின் பயோபிக் படமான சபாஷ் மிது வின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டிரைலரோடு படத்தின் ரிலீஸ் ஜூலை 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.