Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

vinoth
புதன், 9 ஏப்ரல் 2025 (15:04 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி இலக்கை துரத்திய போது 19 ஆவது ஓவரில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார். ஏற்கனவே இதுபோல மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் ருத்துராஜ் அரை சதத்துக்கு மேல் அடித்திருந்தும் ஏன் அவரை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தும் ஏன் ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம் என்பது குறித்து ருத்துராஜ் பேசியுள்ளார். அதில் “கான்வே மிகச்சிறந்த வீரர்தான். ஆனால் அவர் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் ஜடேஜாவின் பாத்திரம் வேறு விதமானது. அவர் சிறந்த பினிஷர்.  கான்வே இறுதிகட்டத்தில் சற்று சிரமப்பட்டார். அதனால்தான் அவரை வெளியேற்றினோம். அங்கே ஜடேஜா தேவைப்பட்டதால் அவரை அனுப்பினோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments