Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஒன் மேன் ஆர்மி’ டி வில்லியர்ஸ்; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களூரு

’ஒன் மேன் ஆர்மி’ டி வில்லியர்ஸ்; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களூரு
, புதன், 25 மே 2016 (11:56 IST)
குஜராத் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
 

 
நேற்று செவ்வாய்கிழமை [24-05-16], பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐபிஎல் போட்டியின் முதல் தகுதிச் சுற்றுப்போட்டி குஜராத் - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
 
இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக வெய்ன் ஸ்மித் 41 பந்துகளில் [5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்] 73 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் வாட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பின்னர், பெங்களூரு அணியில் விராட் கோலி (டக் அவுட்), கெய்ல் (9), கே.எல். ராகுல் (0), வாட்சன் (1), சச்சின் பேபி (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், பெங்களூரு அணி 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், குஜராத் அணி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
 
ஆனால், தனி ஆளாக நின்று போராடிய டி வில்லியர்ஸ் 47 பந்துகளில் [5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 79 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக நின்ற ஸ்டூவர் பின்னி 21 ரன்களும், இக்பால் அப்துல்லா 33 ரன்களும் எடுத்தனர்.
 
இதனால், பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குஜராத் அணி தரப்பில் தவல் குல்கர்னி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது டி வில்லியர்ஸுக்கு வழங்கப்பட்டது. தனி ஆளாக வெற்றிக்கு வித்திட்ட டி வில்லிர்ஸுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் செய்தியாளரிடம் அநாகரிகப் பேச்சு : கெயிலுக்கு ஆரம்பமானது ஆப்பு