Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் செய்தியாளரிடம் அநாகரிகப் பேச்சு : கெயிலுக்கு ஆரம்பமானது ஆப்பு

Advertiesment
பெண் செய்தியாளரிடம் அநாகரிகப் பேச்சு : கெயிலுக்கு ஆரம்பமானது ஆப்பு
, செவ்வாய், 24 மே 2016 (19:21 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் ஆட்டத்தின் போது, ஒரு பெண் செய்தியாளர் மெல் மெக்லாலிடம் அநாகரிகமாக பேசிய மேற்கிந்திய அணிகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலை மீண்டும் ஒப்பந்தம் செய்ய அவருடைய ரெனிகேட்ஸ் அணி மறுத்துள்ளது.


 

 
அந்த ஆட்டத்தின் போது அந்த பெண் நிருபரிடம் “உங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று நானே விரும்பினேன். உங்கள் கண்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அவை அழகாக உள்ளன. இந்த போட்டியில் கண்டிப்பாக எங்கள் அணிதான் வெற்றி பெறுவோம். எனவே போட்டி முடிந்த பின் நாம் ஜாலியாக மது அருந்துவோம். வெட்கப்பட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
 
கெயில் இப்படி பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதற்காக அவருக்கு 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. 
 
இதுபற்றி விளக்கம் அளித்த கெயில் “நான் விளையாட்டாகத்தான் பேசினேன். இது அந்த நிருபரை களங்கப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், அடுத்த வருடம் நடக்க உள்ள போட்டியில் கிறிஸ் கெயிலை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என ரெனிகேட்ஸ் அணி தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவமரியாதையாக பேசிய வாட்சனை கண்டித்த போட்டி நடுவர்