ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ள லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று ஆறுதல் வெற்றிக்காக விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் கே எல் ராகுல், மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. பேயாட்டம் ஆடிய நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். அவர் இன்னிங்ஸில் 5 பவுண்டர்களில் மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம். இந்த இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டிப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.