Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி இடம் ஆட்டம் காணுகிறதா?.... கேப்டன் ரோஹித் ஷர்மா என்ன சொல்கிறார்?

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (15:24 IST)
விராட் கோஹ்லி ரன் குவிக்க தடுமாறி வரும் நிலையில் அவரை அணியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோஹ்லி மீதான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அவர் சிறந்த பேட்ஸ்மேன். அவரின் இடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது நான் மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை. பார்ம் என்பது ஏற்ற இறக்கங்கள் உள்ளது. எல்லா வீரர்களின் வாழ்க்கையிலும் இது ஒரு பகுதிதான். அவர் மீண்டு வருவதற்கு சில இன்னிங்ஸ்கள் தேவை என நான் நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments