Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட்டில் குரங்கம்மை சோதனை! – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (12:32 IST)
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா மற்றும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. முன்னதாக சென்னை விமான நிலையம் வரும் செஸ் விளையாட்டு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. குரங்கம்மை பரிசோதனையில் நெகட்டிவ் வரும் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குரங்கம்மை தொற்று வீரர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments